கோல்கட்டா : ""மேற்கு வங்கத்தில், உயர் கல்வியில், சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும்,"' என, அம்மாநில முதல்வர், மம்தா பானர்ஜி, நேற்று அறிவித்தார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. இதில், ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். இதில், அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி பேசியதாவது: சிறுபான்மையினத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் குழந்தைகள், கல்வியில் பெரிய அளவில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே, திரிணமுல் காங்கிரசின் நோக்கம். சிறுபான்மையினத்தை சேர்ந்த இளைஞர்கள், டாக்டர்களாகவும், இன்ஜியர்களாகவும் ஆக வேண்டும். தொழில் துறையிலும், மற்றவர்
களுக்கு முன் மாதிரியாக திகழ வேண்டும். இதற்காக, அடுத்த கல்வியாண்டிலிருந்து, மேற்கு வங்கத்தில், உயர் கல்வியில், சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு, மம்தா பேசினார்.
No comments:
Post a Comment