சவூதி அரேபியா உள்ளிட்ட உலகின் 40 க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளில் உலக அழகி போட்டிகள் நடைபெறுவதில்லை.
இந்நிலையில் இந்தோனேஷியாவில் உலக அழகிப் போட்டியை ரத்து செய்யுமாறு அந்நாட்டு முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இந்தோனேஷியாவின் பாலித்தீவில் அடுத்த மாதம் 28 ஆம் தேதி உலக அழகி போட்டி நடக்க உள்ளது. இந்நிலையில் உலக அழகி போட்டி என்பது பெண்களின் உடம்பை காண்பிக்கும் போட்டி, இது இஸ்லாமிய விதிக்கு முரணானது. எனவே இந்த போட்டியை இந்தோனேசியாவில் தடை விதிக்க வேண்டும் என்று உலமா கவுன்சில் அந்நாட்டு அரசிடம் வற்புறுத்தியுள்ளது.
பாலித்தீவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். ஏற்கனவே இங்கு நடைபெறும் அழகிப் போட்டியில் நீச்சல் உடை அணியும் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அழகிப் போட்டியையே முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment