
ஜார்கன்ட் மாநிலத்தில் லாரி மோதி ஒருவர் பலியானதால் ஆத்திரம் அடைந்த மக்கள், 10 லாரிகளை தீயிட்டு கொளுத்தினர்.
ஜார்கன்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தன. இதனால், அப்பகுதி மக்கள் லாரி ஓட்டுநர்கள் மீது அதிக ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற விபத்தில் லாரி மோதி பெண் ஒருவர் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விபத்து ஏற்படுத்திய லாரியை தீ வைத்து கொளுத்தினர். இதனால், லாரி கொழுந்து விட்டு எரிந்தது.
இருப்பினும் ஆத்திரம் தணியாத மக்கள் அந்தப் பகுதியில் வந்த 10 லாரிகளுக்கும் தொடர்ந்து தீ வைத்தனர். லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டதையடுத்து தும்கா மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன......
No comments:
Post a Comment