
கோவை ரத்தினபுரி என்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி தேவி. இவரது மகன் ரவி (வயது 25). டிரைவர்.
விஸ்வநாதனின் மகள் கல்பனா (20) தையல் பயிற்சிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தகவல் கிடைத்ததும் ரத்தினபுரி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கல்பனாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். முதல்கட்டமாக கல்பனாவின் அண்ணன் ரவியிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.
இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது ரவி தனது தங்கை என்றும் பாராமல் கல்பனாவை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:–
நான் டிரைவராக பணியாற்றி வருகிறேன். எனக்கு செக்ஸ் மோகம் அதிகம். வீட்டில் இரவு தூங்கும்போது தங்கை கல்பனா அருகில் தூங்குவாள்.
அப்போது எனது கைகளை அவள் மீது தூக்கத்தில் போடுவதுபோல் நடித்தேன். தங்கை என்றும் பாராமல் அவளை அடைய வேண்டும் என்று நினைத்தேன். நேற்று மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தேன். அப்போது வீட்டில் கல்பனா மட்டும் தனியாக இருந்தாள்.
நான் கட்டிலில் சென்று படுத்தேன். கல்பனா வீட்டை சுத்தம்செய்து கொண்டிருந்தாள். அதனை பார்த்த உடன் அவளை அடைய வேண்டும் என்று கட்டிப்பிடித்தேன். உடனே அவள் எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட ஆரம்பித்தாள்.
உடனே அவளை கீழே தள்ளி வாயை பொத்தினேன். இதில் அவள் மயங்கினாள். பின்னர் உல்லாசம் அனுபவித்தேன். பின்னர் கல்பனாவின் முனங்கல் சத்தம் கேட்டது. மயக்கம் தெளிந்தால் நடந்த விபரத்தை வெளியே கூறி விடுவாள் என்ற அச்சம் ஏற்பட்டது.
இதனால் அவளை கொலை செய்ய முடிவு செய்து கழுத்தை நெறித்து கொலை செய்தேன். பின்னர் ஒன்றும் தெரியாததுபோல் தங்கை இறந்து கிடப்பதாக உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்தேன்.
அவர்கள் வீட்டுக்கு வந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம். போலீசார் முதலில் கல்பனா சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை எடுத்துச் சென்றனர். இதனால் நாம் தப்பித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் செய்த துரோகம் பிரேத பரிசோதனையில் என்னை காட்டிக் கொடுத்து விட்டது.
இவ்வாறு ரவி கூறினார்.
No comments:
Post a Comment