நியூயார்க்: "பேரக் குழந்தைகளுடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்ளும் தாத்தா - பாட்டிகளுக்கு, மன அழுத்தம் குறைவதாக, அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, சமூகவியல் துறை பேராசிரியர், சாரா மூர்மன் கூறியதாவது: தாத்தா - பாட்டி மற்றும் பேரக் குழந்தைகள் ஆகியோருக்கிடையே, ஆரோக்கியமான உறவு முறைகள் இருந்தாலும், இரு தரப்பினருக்குமே மன அழுத்தம் என்பது சாதாரணமாக உள்ளது. இருவரும் மனதளவில், உணர்ச்சி பூர்வமாக ஒருவரை ஒருவர் சார்ந்து உள்ளனர். இது, மன ரீதியில், ஆரோக்கியமான விஷயமாகும். அதே நேரத்தில், தாத்தா - பாட்டிகளுக்கு, பேரக் குழந்தைகள் ஆதரவு தருவதாலோ அல்லது அவர்களது ஆதரவைப் பெறுவதாலோ, அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால், தாத்தா - பாட்டிகள்தான், மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். பேரக் குழந்தைகள், கடைக்கு போய் வருவது, கேட்பதை வாங்கிக் கொடுப்பது, பண உதவி மற்றும் வீட்டு வேலைகள் போன்றவற்றைச் செய்வது போன்றவை, இருவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்கிறது. ஒருவரிடமிருந்து ஒருவர் பரஸ்பர உதவிகளைப் பெறுவதும், செய்வதுமாக இருந்தால், தாத்தா - பாட்டிகளின் மன அழுத்தமும் குறையும்; பேரக் குழந்தைகளுக்கும் மனதளவில் இது நன்மையை ஏற்படுத்தும். கடந்த, 1985 முதல் 2004ம் ஆண்டு வரை நடந்த இந்த ஆய்வில், மேற்கண்ட உண்மை உறுதியானது. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment