
ஜேர்மனியில் பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம உரிமை இல்லை என்ற வருத்தத்தில் உள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜேர்மன் நாட்டில் உள்ள Allensbach என்ற நிறுவனமானது இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து பெண்கள், நாங்கள் வேலைகளுக்கு சென்று வருகிறோம், ஆனால் எப்போது ஊதிய உயர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றில் ஆண்களுக்கு நிகரான சம உரிமை கிடைக்கும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் அரசியலிலும் தங்களுக்கு சம உரிமை வேண்டும் என்றும், ஜேர்மனியில் பிரதமராக ஏஞ்சலா மார்க்கெல் பதவியேற்ற பின்பு மகிழ்ச்சியாக இருந்ததாகவும் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்ணுரிமை மற்றும் எம்மா நாளிதழின் எடிட்டர் அலிஸ், பெரும்பாலான பெண்கள் செக்ஸ் உறவுகளிலிலேயே சம உரிமை வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment