
குஜராத் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையருகே குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
எல்லை பாதுகாப்பு படையினருக்கு குஜராத் மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை திறந்து வைத்து சுதந்திர தின உரையாற்றிய மோடி, அடுத்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது டெல்லி செங்கோட்டையில் பா.ஜ.க. தேசிய கொடியை ஏற்றும் என்று குறிப்பிட்டார்.
பேச்சின் இடையே பிரதமர் மன்மோகன் சிங்கையும் மோடி காரசாரமாக தாக்கினார்.
அவரது பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் சிவானந்த் திவாரி, ஏழு பிறவி எடுத்தாலும் டெல்லி செங்கோட்டையில் மோடி கொடியேற்ற முடியாது என்று கூறியுள்ளார்.
மோடியின் பேச்சுக்கு மாறுபட்ட வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, ‘பிரதமரின் சதந்திர தின உரையை கேட்டேன். யாரையும் விமர்சிக்காமல் இந்தியாவுக்கு வளமான எதிர்காலம் உள்ளது என்று அவர் பேசியிருந்தார்’ என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், மோடியின் பேச்சு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், ‘மோடியின் சுதந்திர தின உரையை பொருத்த வரையில் அத்வானியின் கருத்துடன் நான் இணைந்து நிற்கிறேன்.
மோடியின் அதிகாரப் பசிக்கு எல்லைகளே இல்லாமல் போய் விட்டது’ என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment