
சீனாவில் சிறுவனை கடத்தி சென்ற கும்பலொன்று, கண்ணை தோண்டி எடுத்து விழிவெண் படலத்தை மட்டும் திருடி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சான்ஜி மாகாணத்தில் லின்பென் என்ற பகுதியில் வசித்து வந்த பின்பின் என்ற சிறுவன் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
திடீரென அவனை காணவில்லை, சில மணி நேரங்கள் கழித்து முகம் முழுவதும் ரத்தத்துடன் அலறிக் கொண்டிருந்தான்.
சத்தம் கேட்டு சென்ற பெற்றோர் அவனை பார்த்த போது திடுக்கிட்டு போயினர்.
அவனது இரண்டு கண்களும் தோண்டப்பட்டு இருந்தது, அருகில் பார்த்த போது சிறுவனின் இரண்டு கண்களும் கிடந்துள்ளன.
இதனையடுத்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது சிறுவனை கடத்தி கண்ணை தோண்டி எடுத்த கும்பல், சிறுவனின் விழி வெண்படலத்தை மட்டும் வெட்டி எடுத்துள்ளது தெரியவந்தது. இதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.
சீனாவில் உடல் உறுப்பு தானங்களுக்காக 3 லட்சம் நோயாளிகள் காத்திருந்தாலும், ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் உடல் உறுப்புகள் கிடைக்கின்றது.
இதனால் சட்டவிரோதமாக இப்படி கடத்தலில் ஈடுபட்டு மனித உறுப்புகளை வேட்டையாடி கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் கொடூரமும் அரங்கேறி வருகிறது.
No comments:
Post a Comment