Friday, 23 August 2013

போர் அடித்தால் கொலை செய்வார்களா? என்ன ஒரு கொடூரம்



மெரிக்காவில் போர் அடித்ததால் அவுஸ்திரேலிய விளையாட்டு வீரரை கொலை செய்த சிறுவர்கள் மூன்று பேர் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த கிறிஸ்டோபர் லேன்(வயது 22) கால்பந்து வீரர் ஆவார்.
இவர் அமெரிக்காவுக்கு வந்து பேஸ்பால் வீரராக மாறினார்.
இந்நிலையில் கடந்த 16ம் திகதி டங்கன் பகுதியில் பிணமாக கிடந்துள்ளார், தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மூன்று பேர் போர் அடித்ததால் கிறிஸ்டோபரை சுட்டுக் கொன்றது தெரியவந்தது.
இதனையடுத்து அச்சிறுவர்களை கைது செய்த பொலிசார், கொலை குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் 17 வயது சிறுவன் சம்பவம் நடந்தபோது வாகனத்தை ஓட்டியதால் அவன் மீது கொலைக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் நீதிமன்றத்தில் அச்சிறுவன், தானே கிறிஸ்டோபரை சுட்டுக் கொன்றதாக கூறியுள்ளான்.
இவரது மரணம் குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment