Tuesday, 13 August 2013

இயேசு பெயரை குழந்தைக்கு சூட்ட அமெரிக்க கோர்ட்டு தடை

‘மெஸ்சியா’ என்று அழைக்கப்படும் இயேசு பெயரை குழந்தைக்கு சூட்ட அமெரிக்க கோர்ட்டு தடை
அமெரிக்காவில் உள்ள டென்னிசியில் உள்ள சான்செரி பகுதியை சேர்ந்தவர் மார்டின். இவரது மனைவி ஜலீசா மார்டின். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
அவர்களுக்கு மைகா, மாசன் மற்றும் மெஸ்சியா என பெயரிட்டுள்ளனர். இவர்களில் மெஸ்சியா என்ற ஆண் குழந்தை பிறந்து 7 மாதம் தான் ஆகிறது.
இந்த பெயர் சூட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோகியில் உள்ள சான்சரி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லு ஆன் பால்லேவ் தீர்ப்பளித்தார்.
அதில், ‘மெஸ்சியா’ என்பது இயேசு கிறிஸ்துவின் பெயர். அது கடவுள் இயேசுவுக்கு மட்டுமே சொந்தம். அமெரிக்காவில் அதை வேறு யாரும் சூட்டிக் கொள்ளக்கூடாது. இதை அமெரிக்கர்கள் யாரும் விரும்பவில்லை. இக்குழந்தைக்கு அப்பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆகவே, இக்குழந்தைக்கு ‘மெஸ்சியா’ என பெயர் சூட்டக்கூடாது என தடை விதித்தார். மேலும் ‘மார்டின் டிசான் மெக்டுலாக்’ என பெயரை மாற்றி உத்தரவிட்டார். குழந்தையின் பிறப்பு சான்றிதழில் இருந்து ‘மெஸ்சியா’ என்ற பெயரை மாற்றவும் வலியுறுத்தினார்.
அதை ஏற்க குழந்தையின் தாயார் ஜலீசா மார்டின் மறுத்து விட்டார். நான் கடவுளின் பெயராக அதை எனது குழந்தைக்கு சூட்டவில்லை. எனது மற்ற 2 குழந்தைகளுடன் சேர்ந்து இக்குழந்தையையும் அழைக்க பெயர் வசதியாக இருந்தது. அதனால்தான் ‘மெஸ்சியா’ என பெயர் சூட்டினேன் என்றார்.

No comments:

Post a Comment