Monday, 26 August 2013

ஏழைகள் நெருங்க முடியாத அளவுக்கு கோர்ட்டு வழக்கு செலவு அதிகம்: சுப்ரீம் கோர்ட்டு கருத்து

ஏழைகள் நெருங்க முடியாத அளவுக்கு கோர்ட்டு வழக்கு செலவு அதிகம்: சுப்ரீம் கோர்ட்டு கருத்து


ஏழைகள் நெருங்க முடியாத அளவுக்கு கோர்ட்டு வழக்கு செலவு அதிகமாகி விட்டது என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கில் ஆஜராக வக்கீல் ஒருவர் கையெழுத்திட்டு விட்டு, அதன்பின்னர் ஒரு முறைகூட அந்த வழக்கில் ஆஜராகவில்லை. இதை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு கூறியதாவது:- 

சட்டத்தொழில் என்பது ஒரு காலத்தில் மேன்மையானதாக கருதப்பட்டது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அது வணிகமயமாகி விட்டது. கோர்ட்டுகளில் வழக்கு தொடர்வது என்பது அதிக செலவு பிடிக்கிற ஒன்றாகி விட்டது. ஏழை மனிதர்களால் நெருங்க முடியாத அளவுக்கு அது சென்று விட்டது. 

வழக்கு தொடுத்தவரின் வாழ்நாளில் ஒரு வழக்கு விசாரணை முடிந்து இறுதிக்கட்டத்தை அடைந்து விடாது, வழக்கு தொடுத்தவரின் விதியை ஒரு ஜோதிடரால்கூட கணித்து கூறி விட முடியாது என்றெல்லாம் நீண்ட காலமாக கருதப்பட்டு வந்தது. நீதி நிர்வாகம் செய்வதில் நீதிபதிகளை போன்று வக்கீல்களுக்கும் சம பங்கு உள்ளது. 

சட்டம் வணிகம் அல்ல. வக்கீல் என்பவர் ஒரு கோர்ட்டின் அதிகாரி. நீதிமன்றத்தை சுமுகமாக இயங்கச்செய்கிற கடமை அவருக்கு உண்டு. துயரத்தில் இருக்கிற மனிதருக்கு அவர் புத்துயிர் ஊட்ட வேண்டும். உதவி செய்ய ஆளற்ற அப்பாவி வழக்குதாரரின் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தக்கூடாது.

இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது

No comments:

Post a Comment