
அமெரிக்க ராணுவத்தில் சமீபகாலமாக செக்ஸ் புகார்கள் அதிகரித்து வருகிறது. ராணுவம், கடற்படை பயிற்சி நிலையங்களில் பணியாற்றும் பயிற்சியாளர்களே, அங்குள்ள வீராங்கனைகளை கட்டாயப்படுத்தி இந்த குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள்.
அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் சமீபத்தில் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் இந்த விரும்பத்தகாத செக்ஸ் புகார் 37 சதவீதம் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டது. இதனால் செக்ஸ் புகாரில் சிக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராணுவ மந்திரி ஷாக் ஹாகெல் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து ராணுவ பயிற்சியாளர் 55 பேரும், கடற்படை பயிற்சியாளர் 5 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கான புகார்கள் தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment