சிவகங்கையில் நள்ளிரவு முஸ்லிம் வழிபாட்டு ஸ்தலம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற் பட்டுள்ளது.
சிவகங்கை திருவள்ளுவர் தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீற்று கொட்டகையாலான முஸ்லிம் வழிபாட்டு ஸ்தலம் அமைக்கப்பட்டது.
இங்கு தினமும் ஏராளமான முஸ்லிம்கள் சென்று தொழுகை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீர் என்று முஸ்லிம் வழிபாட்டு ஸ்தலம் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சிவகங்கை தீயணைப்பு அதிகாரி திருமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் உள்ளே இருந்த பாய், புத்தகம் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசில் சுகர்னோ என்பவர் புகார் செய்தார். புகாரின் நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் வழிபாட்டு ஸ்தலத்திற்கு தீ வைத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் முகுந்த் கோட்னிஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், வெள்ளத்துரை ஆகியோர் விரைந்து சென்று எரிந்து நாசமான முஸ்லிம் வழிபாட்டு ஸ்தலத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment