புதுடில்லி: "இந்தியர்களில், 90 சதவீதம் பேர் முட்டாள்கள்' என, தெரிவித்த கருத்துக்காக, இந்தியப் பத்திரிகை கவுன்சில் தலைவர், மார்கண்டேய கட்ஜு நேற்று மன்னிப்பு கேட்டார். இந்தியப் பத்திரிகை கவுன்சில் தலைவரும், சுப்ரீம் கோர்ட், முன்னாள் நீதிபதியுமான, மார்கண்டேய கட்ஜு, கடந்த டிசம்பர் மாதம் நிருபர்களிடம் பேசுகையில், "இந்தியர்களில், 90 சதவீதத்தினர் முட்டாள்கள்' என்றார். இது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கட்ஜுவிற்கு எதிராக, கோர்ட்டில், வழக்கும் தொடரப்பட்டது.
இந்த நிலையில், நேற்று இந்த விவகாரம் தொடர்பாக பேசிய கட்ஜு, ""நான் தெரிவித்த கருத்து, யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தெரிவிக்கப்பட்டதல்ல; என்னுடைய கருத்துக்களால், யாராவது மனம் புண்பட்டிருந்தால், அதற்காக, நான் மன்னிப்பு கேட்கிறேன்,'' என்றார்.
No comments:
Post a Comment