
குஜராத் முதல்– மந்திரியும் பாரதீய ஜனதா பிரசார குழு தலைவருமான நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மன்மோகன்சிங்கையும், காங்கிரஸ் அரசையும் கடுமையாக குறை கூறினார்.
அதே போல் பாட்னாவில் கொடியேற்றி பேசிய பீகார் முதல்– மந்திரி நிதிஷ்குமார், நரேந்திர மோடி ஆட்சியை சாடினார். அவர் கூறியதாவது:–
ஒரு மாநிலத்தில் நடைபெறும் சில வளர்ச்சி திட்டங்கள் சிலருக்கு மட்டும் நன்மை அளிக்கும். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு அதனால் எந்த பயனும் இல்லை. எங்கள் மாநிலத்தில் அது போன்று இல்லை. ஒட்டு மொத்த வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால் சில சாதனைகளை மட்டும் வைத்துக் கொண்டு சிலர் வருங்காலத்தைப் பற்றி பிரசாரம் செய்கிறார்கள்.
பீகாரில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம். 2015–க்குள் அனைத்து கிராமங்களுக்கும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்குவோம். அனைத்து நகரங்களுக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும். இல்லை யெனில் அடுத்த தேர்தலில் நான் முதல்– மந்திரி பதவிக்கு போட்டியிடமாட்டேன். பீகார் மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி மற்றும் கடன் உதவிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment