புதுடெல்லி: நாட்டில் தினமும் 370பேர் தற்கொலை செய்து கொள்வதாக உள்துறை இணை அமைச்சர் ஆர்பிஎன் சிங் தெரிவித்தார்.மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது அவர் பேசுகையில் கூறியதாவது: தேசிய குற்ற ஆவண காப்பகம், சமீபத்தில் நாட்டில் நடைபெறும் தற்கொலைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது. அதில் நாளொன்றுக்கு 370 பேர் தற்கொலை செய்துகொள்வதாக தெரியவந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் இருந்து 2013 வரை 4 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.2012ம் ஆண்டு 1 லட்சத்து 35,445 பேரும், 2011ல் ஒரு லட்சத்து 35,585 பேரும் தற்கொலையை செய்துகொண்டுள்ளனர். 2010ம் ஆண்டு 1 லட்சத்து 34,599 பேர் இதே முடிவை எடுத்துள்ளனர். அதிக தற்கொலை நடைபெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இங்கு 3 ஆண்டுகளில் 49,451 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அடுத்த இடம் பிடித்துள்ள மகாராஷ்டிராவில் 47,975 தற்கொலை வழக்குகள் பதிவாகி உள்ளது. 47,486 பேருடன் மேற்குவங்கம் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment