அவர் கூறியிருப்பது:
2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த முஸ்லிம் இனப்படுகொலைக்குப் பிறகு 10 ஆண்டுகளாக பிரிட்டன் மோடியை புறக்கணித்து வருகிறது. குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பிரிட்டன் கவலை அடைந்துள்ளது. குஜராத் இனப்படுகொலையில் 3 பிரிட்டன் குடிமக்கள் கொல்லப்பட்டனர்.
இவ்வழக்குகளில் விசாரணையும், நீதியும் கிடைக்க வேண்டும். அதே வேளையில், இந்தியாவில் பிரபல அரசியல் தலைவர்களுடன் சந்திப்பை நடத்துவது எங்களது கடமை. ஒரு தனி நபருடன் அல்ல, மாறாக ஒரு மாநிலத்துடனே நான் பழகினேன். இது மோடிக்கான அங்கீகாரமாக கருதவிடாதீர்கள். ”இவ்வாறு ஜேம்ஸ் கூறியுள்ளார்.
முன்னர் பிரிட்டன் எம்.பி. பாரி கார்ட்னர் காமன்ஸ் அவையில் உரை நிகழ்த்த மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். எம்.பி.க்கள் அழைப்பு விடுப்பதற்கும், பிரிட்டன் அரசு அழைப்பு விடுப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக ஜேம்ஸ் விளக்கமளித்துள்ளார். பாராளுமன்றத்திற்கு யாரையும் அழைக்க இந்தியாவைப் போலவே பிரிட்டனில் உள்ள எம்.பி.க்களுக்கும் உரிமை உண்டு என்று ஜேம்ஸ் கூறுகிறார். மோடிக்கு அழைப்பு விடுத்ததற்கு பிரிட்டன் பாராளுமன்றத்தில் உள்ள எம்.பி.க்கள் பலர் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். மேலும் அங்குள்ள இந்திய முஸ்லிம்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்
No comments:
Post a Comment