
திருச்சி உறையூர் நவாப்தோட்டம் ஐஸ் கம்பெனி அருகே குடியிருப்பவர் சங்கர். (வயது 30). ஜோசிய தொழில் செய்து வந்தார். இவரது மனைவி தனலெஷ்மி (வயது 25). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
இன்று காலை சங்கர் வீடு நீண்ட நேரமாக பூட்டி கிடந்தது. காலை 10 மணி ஆகியும் கணவன் மனைவி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதை தொடர்ந்து சங்கரின் அண்ணன்கள் ஹரிகரன், மற்றும் ஆனந்த் ஆகியோர் சந்தேகம் அடைந்தனர்.
உடனே ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டி பார்த்தனர். அப்போது சங்கர் மற்றும் தனலெட்சுமி ஆகியோர் வாயில் நுரை தள்ளிய படி கட்டிலில் பிணமாக கிடந்தனர். உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இது குறித்து உறையூர் போலிசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று உடல்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உறையூர் நவாப் தோட்டத்தில் திருமணம் ஆன 2 வருடத்தில் ஜோசியர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை குறித்து போலீசார் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ஜோசியர் தொழில் பார்த்து வந்த சங்கர் சமூக நீதி என்ற அமைப்பில் பொருளாளராகவும் உள்ளார். இடையில் ரெயில்வே குடியிருப்பு பகுதியை சேர்ந்த சிலருடன் சங்கருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் அரசு வேலை வாங்கி தருவதாகவும், ஜோசியர் தொழிலுக்கு அரசு அங்கிகாரம் வாங்கி தருவதாவும் சங்கரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
இதை நம்பி சங்கர் தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் பணம் வாங்கி அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சங்கரும் ரு.5 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எதிர்பார்த்தது போல் அவர்கள் வேலை வாங்கி கொடுக்க வில்லை, இதனால் பணம் கொடுத்தவர்கள் சங்கரிடம் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்தனர். மேலும் சங்கரிடம் பணத்தை கேட்டு கடந்த ஒரு வாரமாக சிலர் சித்ரவதை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று காலை மீண்டும் சங்கரை சிலர் அழைத்து சென்றார்களாம். இது குறித்து அவரது மனைவி தனலெட்சுமி உறையூர் போலீசில் தனது கணவரை மீட்டு தரும்படி புகார் கூறியுள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சங்கர் மீண்டும் ஊருக்கு திரும்பி உள்ளார். அதன் பிறகு தான் நள்ளிரவில் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து சங்கரின் சகோதரர்கள் ஹரிகரன், ஆனந்த் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–
எனது தம்பி ஜோசியர் வேலை பார்த்து வந்தான். மேலும் அரசு வேலை வாங்கி தருவதாக கல்லுக்குழியை சேர்ந்த சிலர் கூறியதை நம்பி அவன் பணம் ரு.5 லட்சம் கொடுத்துள்ளான். மேலும் சிலரது பணத்தையும் வாங்கி கொடுத்துள்ளான். ஆனால் அந்த நபர்கள் வேலை வாங்கி கொடுக்கவில்லை.
இதற்கிடையே எனது தம்பியிடம் பணத்தை கேட்டு சிலர் ஒரு வாரமாக சித்ரவதை செய்துள்ளனர். நேற்று காலையும் அழைத்து சென்று மிரட்டியுள்ளனர்.
இது குறித்து போலிசிலும் புகார் செய்தோம். நேற்று இரவு தான் சங்கரை மீட்டு வந்தோம். இரவில் தைரியமாக தூங்கு, நாளை பகலில் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினோம். அதற்குள் இப்படி உயிரை விட்டு விட்டானே.
இவ்வாறு கூறி கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தற்கொலை செய்வதற்கு முன்பு சங்கர் டைரியில் இரண்டு கடிதங்கள் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதங்களை உறவினர்கள் போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளன
No comments:
Post a Comment