
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் சிபு, லாரி டிரைவர். இவரது மனைவி சிந்து, (வயது 34). இந்த தம்பதிக்கு ரீனா (6), கோகுல் (3), கோபு (6 மாத கைக் குழந்தை) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். இவர்களில் ரீனா 1–ம் வகுப்பு படித்து வந்தாள்.
சிபு அடிக்கடி லாரி ஓட்டு வதற்காக வெளியூர் சென்று விடுவார். 2 நாட்களுக்கு முன்பும் அவர், வழக்கம் போல லாரி ஓட்ட சென்று விட்டார். வீட்டில் சிந்துவும் அவரது 3 குழந்தைகள் மட்டும் தனியாக இருந்தனர்.
திடீரென்று இவர்கள் வீட்டில் இருந்து அலறல் சத்தமும், தீப்பிடித்து எரியும் புகையும் எழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்ற போது, சிந்துவின் வீடு உள்ள பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
இதனால் அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் படுக்கை அறையில் சிந்துவும், அவரது 3 குழந்தைகளும் தீயில் கருகி இறந்து கிடந்தனர். இதுபற்றி திருச்சூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
சிபுவின் செல்போன் நம்பரை அக்கம் பக்கத்தில் கேட்டு வாங்கிய போலீசார் போன் மூலம் அவருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை கேட்டதும் சிபு அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்து விட்டார்.
அவர் சாலக்குடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தனது 3 குழந்தைகளையும் சிந்து மண்எண்ணை ஊற்றி எரித்துக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
No comments:
Post a Comment