Friday, 16 August 2013

மோடி சவால் பேச்சு தவறானது-அத்வானி




புதுடெல்லி : பிரதமருக்கு மோடி சவால்விட்டது தவறானது என்று நேற்று அத்வானி கருத்து கூறியுள்ளார். ஏற்கனவே மோடியை பிரசார குழு தலைவராக ஆக்கியது அத்வானிக்கு பிடிக்கவில்லை. நேற்று புஜ் நகரில் மோடியின் சுதந்திர தின பேச்சு பலரையும் அதிர வைத்தது போல, அத்வானியையும் எரிச்சல் அடைய வைத்துள்ளது. அவரிடம் மோடி பேச்சு பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. 

 முகத்தை சுளித்தபடி அமைதியாக இருந்த அவர், பேச்சில் மோடி பேச்சை கண்டித்து மறைமுகமாக கருத்து கூறினார்.  அவர் பேசுகையில், சுதந்திர தினம் என்பது புனிதமான தினம். நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் நாள். இந்த நாளில் ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ளாமல் பேசுவது தான் சரியானது’ என்று கருத்து கூறினார்

No comments:

Post a Comment