
மிகவும் அழகாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக ஈரானில் பெண் கவுன்சிலர் ஒருவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் குவாஸ்வின் நகராட்சி கவுன்சிலர் தேர்தல் கடந்த ஜீன் மாதம் 14ம் திகதி நடந்தது.
இந்த தேர்தலில் நினா சியகாலி மொராடி(வயது 27) என்ற பெண் போட்டியிட்டார்.
இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை, 10000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில் நினா தகுதியிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது இதற்கான காரணம் வெளியாகியுள்ளது. இதற்கு, நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், இப்படிப்பட்ட பெண்கள் இந்த வேலைக்கு பொருத்தமாக இருக்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனராம்.
இதுகுறித்து நகராட்சித் தலைவர் கருத்து தெரிவிக்கையில், எங்களுக்கு கேட் வாக் போகும் மொடல்கள் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment