
அறிஞர்களையும், தலைவர்களையும் முன்மாதிரியாக பாவித்து, வாழ்க்கையை எதிர்நோக்கிய மனிதன், இன்று, சினிமா, "டிவி' நிகழ்ச்சிகளின் கதாபாத்திரங்களை முன்மாதிரியாக நினைத்து வாழ ஆரம்பித்து விட்டான். தகவல் தொடர்பில் மைல் கல்லாய் இருந்த "டிவி' பெட்டிகள், இன்றைய தினம், குடும்ப உறவுகளை சிதைக்கும் அளவுக்கு ஆக்கிரமித்து விட்டன. அறிவுக்கான விவாதங்கள், கண்டுபிடிப்புகள், நிகழ்வுகள், இயற்கையின் அற்புதங்கள் என எவ்வளவோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும், பொழுதுபோக்குக்காக மக்களை அடிமைப்படுத்தும் நிகழ்ச்சிகளே அதிகம் பார்க்கப்படுகின்றன. இல்லத்தரசிகள், வேலைக்குச் செல்பவர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் வீட்டுக்குச் சென்றதும், "டிவி'யில் மூழ்கி விடுகின்றனர். பல குடும்பங்களில் உறவு சார்ந்த சிக்கல்களும், பொருளாதாரம் மற்றும் வாழ்வு முறையை மாற்றும் அளவுக்கு சிக்கல்களும் உருவாகின்றன.
மக்கள் என்ன சொல்கிறார்?
கிட்டுசாமி, செரங்காடு: "டிவி' நிகழ்ச்சிகளை பார்க்காத மக்களே எங்கும் கிடையாது. சில வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட "டிவி'களை வைத்திருக்கின்றனர். பாடல் நிகழ்ச்சிகளும், தொடர் நாடகங்களும் அதிகம் பார்க்கப்படுகின்றன. "டிவி' தொடர்களை பார்க்கும் பெண்கள், அதை பார்க்கும் நேரங்களில் தங்களையே மறந்து விடுகின்றனர். நிகழ்ச்சிகளை சஸ்பென்ஸ் வைத்து முடிப்பதால், மறுநாள் காத்திருந்து பார்க்கிறார்கள்.சமையல் உள்ளிட்ட பணிகளில் பெண்களுக்கு நாட்டம் குறைகிறது. எதையாவது சமைத்தோம், பரிமாறினோம் என்று இருக்கின்றனர். வீடுகளில் மற்ற பணிகள் தேங்குகின்றன. குழந்தைகளுக்கான உணவு பரிமாறும் நேரம், அவர்களை கவனிக்கும் நேரம் கூட "டிவி' நிகழ்ச்சிகளால் குறைந்து விட்டது. இதன் காரணமாக, குழந்தைகளும் "டிவி' நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகி, தங்கள் பணிகளையும் செய்ய இயலாத நிலையுள்ளது
No comments:
Post a Comment