Friday, 30 August 2013

தகாத உறவு: கணவரை அடித்து கொன்ற மனைவி



ஜப்பானில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை, காபி கோப்பையால் மனைவி அடித்து கொன்றுள்ளார்.
ஜப்பானின் டோக்கியோ நகரை சேர்ந்தவர் யாசோ ஹிராஸ்(வயது 70), பல்கலைகழக பேராசிரியராக பணிபுரிகிறார், இவரது மனைவி எமிகோ.
ஹிராசுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது எமிகோவுக்கு தெரியவந்தது.
இதனால் கோபம் கொண்ட எமிகோ, கணவருடன் சண்டை போட்டுள்ளார்.
இந்த சண்டை பயங்கரமடையவே, ஒரு கட்டத்தில் காபி கோப்பையை எடுத்து கணவரை தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த ஹிரோஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் உயிரிழந்தார்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார், எமிகோவை கைது செய்தனர்.

No comments:

Post a Comment