Friday, 30 August 2013

கர்ப்பமான இளம் பெண்ணால் தேவாலய பணியை துறந்த பாதிரியார்



ரியோடி ஜெனிரோ: பிரேசில் நாட்டை சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியார், இளம் பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் தந்தையானார். இதனால், அவர், தேவாலய பணிகளை துறந்து, விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். பிரேசில் நாட்டின், பாஹியா மாகாணத்தில், கிறிஸ்துவ பாதிரியராக இருப்பவர் ஜெரோனிமோ மோரீரா, 32. இவருக்கும், இப்பகுதியை சேர்ந்த, 23 வயது பெண்ணுக்கும், 2007ல், தொடர்பு ஏற்பட்டது. இதனால், அந்த பெண் தற்போது, நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். தேவாலய பணிக்காக அர்ப்பணித்து கொண்ட பின், இந்த தவறை செய்ததற்காக, ஜெரோனிமோ, பலமுறை கண்ணீர் விட்டுள்ளார். பாதிரியராக தொடர்ந்து பணியாற்றுவதா அல்லது, இளம் பெண்ணின் குழந்தைக்கு தந்தை பொறுப்பை ஏற்பதா என குழம்பினார். கடைசியில், அவரது மனசாட்சி வெற்றி பெற்றது. பாதிரியார் பணியை துறக்க துணிந்தார். கடந்த வாரம் நடந்த, கூட்டு பிரார்த்தனையின் போது, பாதிரியார் ஜெரோனிமோ, தான் செய்த தவறை அனைவரது முன் ஒப்புக்கொண்டார். தேவாலய பணியை துறந்து, இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார். இதற்காக, போப் பிரான்சிஸிடம் அனுமதி கேட்டு, கடிதம் அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment