புதுடில்லி : ஒப்புதலுடன் செக்ஸ் உறவு மேற்கொண்டால், 18 வயதிற்கு கீழ் இருந்தாலும் அது குற்றமாகாது என டில்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் தொடர்பான சட்டத்தின் அடிப்படையில் ஐகோர்ட் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு எதிராக போலீசார் மற்றும் டில்லி மகளிர் ஆணையம் ஆகியவற்றின் சார்பில் தாக்கல் செய்ய மனுவையும் ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
No comments:
Post a Comment