Tuesday, 13 August 2013

இளவரசன் பற்றி கட்டுரை வெளியிட நக்கீரனுக்குத் தடை!


தர்மபுரி காதல் ஜோடி ஜாதிக்கலப்பு திருமண விவகாரத்தில் இளவரசன் அகால மரணம்டைந்த வழக்கில் இளவர்சான் பற்றி கட்டுரை வெளியிட நக்கீரன் பத்திரிகைக்கு ஐகோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

திவ்யா தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து திவ்யா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் நர்சிங் படித்துவரும்போது இளவரசன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவருடன் சென்று வாழத் தொடங்கினேன். இதை எனது பெற்றோர் எதிர்த்தனர்.

இந்த நிலையில் எனது தந்தை 7.11.12 அன்று தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகு என்னால் இயல்பான வாழ்க்கையை வாழமுடியவில்லை. இப்போதும் என்னை சோகம் சூழ்ந்துள்ளது.

எனது வயதுக்கான தவறுகளையும், அதனால் ஏற்பட்ட வலிகளையும் உணர்ந்தேன். இதனால் எனது உடல் நலனும் கெட்டது.

இந்த நிலையில் என் தாயார் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். எனது குடும்பத்தில் நிகழ்ந்த சோக சம்பவம் காரணமாக அவர் சுகவீனம் அடைந்தார். தாயாரை கவனிப்பதற்காக தாய்வீடு சென்றேன்.

இந்த நிலையில் இளவரசன் ஜூலை 4ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். தந்தையை இழந்ததால்இளவரசனுடன் இயல்பான வாழ்க்கையை நடத்தமுடியவில்லை. இளவரசன் இறந்த பிறகு எனக்கு டாக்டர்கள் மூலம் கவுன்சிலிங் தர ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்த நிலையில் நக்கீரன் பத்திரிக்கையில் என்னைப்பற்றிய தவறான குற்றச்சாட்டுகளுடன் 5 கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அதில் எனது தனிப்பட்ட வாழ்க்கையையும் தவறாக குறிப்பிட்டுள்ளனர். எனது தனிப்பட்ட வாழ்க்கையை குலைக்கும் நோக்கத்துடன் அந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

இதற்கு அந்தக் கட்டுரை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்கள் பொறுப்பு. இந்த நிலையில் கடந்த ஜூலை 13- 16ஆம் இதழில் "காதல் ஜாதி இளவரசன், திவ்யா, நெஞ்சை உலுக்கும் நிஜக்கதை' - புதிய தொடர் என்ற தலைப்பில் எனது புகைப்படத்துடன் அறிவிப்பு வெளியானது.

அடுத்த இதழைல் காதல் ஜாதி இளவரசன் பேசுகிறேன் என்று அறிவிப்பு வெளியானது.

இளவரசன் கூறியது போல் அந்தத் தலைப்பில் கட்டுரை வெளியானது. அதில் எனது கேலிச்சித்திரமும் இடம்பெற்றுள்ளது. நானும் இளவரசனும் பேசியது போன்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. எனது பெயரை கெடுக்கும் வகையில் இந்தக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரை தொடர்ந்து வெளியிடப்படும் என்று அஞ்சுகிறேன்.

அடிப்படை ஆதாரமில்லாத இவ்வகைக் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தால் அது என் குடும்பத்தினரின் வாழ்க்கையையும், எனது தனிப்பட்ட வாழ்க்கையையும் அது பாதிக்கும். 

அவதூறாக என்னைப்பற்றி சித்தரித்து கட்டுரை வெளியிட்டதற்காக ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும். அந்தக் கட்டுரையை வெளியிட நிரந்தரத் தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு திவ்யா சார்பில் தக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளவரசன் பற்றிய கட்டுரையை வெளியிட நக்கீரன் பத்திரிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment