Friday, 23 August 2013

என்னை கற்பழித்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: பெண் போட்டோகிராபர் ஆவேசம்

என்னை கற்பழித்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: பெண் போட்டோகிராபர் ஆவேசம்

மும்பையில் 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு பலத்த உள்காயம் ஏற்பட்டுள்ளது. அதிக ரத்தம் வெளியேறியதால் அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டு வருகிறது. அபாய கட்டத்தை தாண்டினாலும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அருகில் அவரது தாயார் இருந்து கவனித்து வருகிறார். தாயாரிடம் அவர் நடந்த சம்பவத்தை கூறி கண்ணீர்விட்டு கதறி அழுதார். அவர் கூறியதாவது:–
5 பாவிகளும் என் வாழ்க்கையை நாசம் செய்து விட்டனர். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பு ஏற்பட செய்து விட்டனர். எனக்கு ஏற்பட்ட கொடுமை இந்த நகரத்தில் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது. என்னை சீரழித்த கயவர்களை சும்மா விடக்கூடாது. அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும. ஆயுள் தண்டனைக்கு குறையாமல் தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் எனக்கு ஏற்பட்ட கொடுமைக்கு தகுந்த நிவாரணமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட அவர் மனதளவில் தெம்பாக காணப்பட்டார். இந்த சம்பவத்தில் போலீசார் எடுத்து வரும் நடவடிக்கைகளை தனது அறையில் உள்ள டெலிவிஷனில் பார்த்து தெரிந்து கொள்கிறார்.
நேற்று அவர் ஒரு கப் டீ மட்டுமே குடித்தார். இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தார். அவருக்கு இரவு முழுவதும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment