திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடற்கரை பகுதியில் நேற்று காலை ஒரு இளம்பெண் அனாதையாக சுற்றிக் கொண்டிருந்தார். ரோந்து போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர், தனது ஊர் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் என்று கூறினார். போலீசார் ஆற்றிங்கல் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு அந்த பெண் பற்றிய விவரங்களை தெரிவித்தனர்.
அங்குள்ள போலீசார் இதுபற்றி விசாரித்தபோது, அந்த பெண்ணை காண வில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்த விவரத்தை தெரிவித்ததோடு அந்த பெண்ணை ஆற்றிங்கல் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த பெண் கூறியதாவது:–
கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது செல்போனுக்கு ஒரு மிஸ்டுகால் வந்தது. அதை தொடர்பு கொண்டு பேசியபோது, திருவனந்தபுரம் பீமாபள்ளி பகுதியைச் சேர்ந்த ஷானு (வயது 20) என்பவர் பேசினார். அவரோடு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினேன். பின்னர் அவரை நேரில் சந்தித்தேன்.
அப்போது என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி 2 நாட்களுக்கு முன்பு அவரோடு சென்றேன். ஒரு காரில் என்னை அழைத்துச்சென்ற ஷானு திருவனந்தபுரத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றி திரிந்தார்.
பின்னர் நாங்கள் கோவளம் கடற்கரைக்கு வந்து தங்கினோம். அங்கு ஷானு என்னுடன் உல்லாசமாக இருந்தார். அதன் பிறகு செலவுக்கு பணம் இல்லை என்று கூறி எனது 4 பவுன் செயினையும் வாங்கிக் கொண்டார். அதை பணமாக்கி வருவதாக கூறி சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை.
அவரை தேடி அலைந்த போது, என்னை ஏமாற்றிச் சென்றது தெரிய வந்தது.
No comments:
Post a Comment