Monday, 19 August 2013

ஆம்புலன்ஸ் தீப்பிடித்த விபத்தில் 4 நோயாளிகள் உடல் கருகி பலி



உத்தரபிரதேச மாநிலம், லக்னோ மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று ஆஸ்பத்திரி நோக்கி விரைவாக சென்றுக் கொண்டிருந்தது.

ஆம்புலன்சின் உள்ளே நோயாளிக்கு துணையாக அவரது உறவினர் 4 பேரும் அமர்ந்திருந்தனர்.

பந்தாரா பகுதியருகே ஒரு வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து சாலையில் சறுக்கியபடி சென்றது.

இந்த உராய்வினால் கிளம்பிய தீப்பொறி டீசல் டாங்கியில் பட்டதால் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிழம்பாக மாறியது.

உள்ளே இருந்தவர்கள் அனைவரையும் சூழ்ந்த தீ, அவர்களை எரிந்து சாம்பலாக்கியது.

No comments:

Post a Comment