Tuesday, 20 August 2013

ரெயில் மோதி 37 பேர் பலி:

பீகாரில் ரெயில் மோதி 37 பேர் பலி: ரெயில் பெட்டிகள் எரிப்பால் ரூ.90 கோடி இழப்பு

பீகார் மாநிலம் ககரியா மாவட்டத்தில் உள்ள தமாரா காட் ரெயில் நிலையத்தில் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் 37 பயணிகள் பலியானார்கள். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரெயிலுக்கு தீ வைத்தனர். இதில் 15 ரெயில் பெட்டிகள் தீயில் எரிந்து நாசமானது.
ரெயில் பெட்டிகளை நாசமாக்கிய பொதுமக்கள் அதன் பிறகும் ஆத்திரம் தணியாமல் தமாராகாட் ரெயில் நிலையத்தை சூறையாடினார்கள். ரெயில்வே தொலை தொடர்பு சாதனங்களையும் அடித்து உடைத்தனர். ரெயில் தண்டவாளங்களும் பெயர்க்கப்பட்டது.
கூடுதல் போலீஸ் படை வந்த பிறகே ரெயில்வே உடமைகள் நாசமாக்கப்படுவது தடுக்கப்பட்டது. 15 பெட்டிகள் எரிப்பு மற்றும் ரெயில் நிலையத்துக்கு ஏற்பட்ட சேதம் பற்றி கிழக்கு மண்டல ரெயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் ரெயில்வேக்கு ரூ.90 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதனால் சகர்சா– மன்சி இடையே ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
விபத்து பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணைக்குழு அதிகாரிகள் இன்று சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரெயில் டிரைவர் மற்றும் அவருக்கு சிக்னல் கொடுத்த ஊழியரிடம் விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment