அமெரிக்காவின் தெற்கு நகரமான நியூ ஓரிலீன்ஸ் பகுதியில் நேற்று அன்னையர் தின பேரணி நடைபெற்றது. அப்போது, பேரணியாகச் சென்றவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், இதனை தனிப்பட்ட ஒருவர் தான் நடத்தியிருப்பதாகவும், பயங்கரவாதிகளின் பங்களிப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment