மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்த வாலிபருடன், தாயாருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் அவருடன் ஓட்டம் பிடித்தார். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமணம் நிச்சயம்
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம், சத்யா நகரை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி வசந்தா (வயது 35). இருவரும் கட்டிட வேலை பார்த்து வந்தனர்.
அவர்களுடைய 18 வயது மகளுக்கும், திண்டிவனத்தை சேர்ந்த பார்த்தசாரதி (25) என்பவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக நிச்சயம் செய்யப்பட்டது.
தாயுடன் பழக்கம்
அதன்பிறகு பார்த்தசாரதி, அடிக்கடி சென்னைக்கு வந்து தனது வருங்கால மனைவியை பார்த்துவிட்டு செல்வார். அப்போது வசந்தாவுடன் பார்த்தசாரதிக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
பார்த்தசாரதியின் பேச்சு மற்றும் செயலில் வசந்தா மயங்கினார். கடந்த மாதம் வழக்கம் போல் வீட்டுக்கு வந்த பார்த்தசாரதி, தனது தாய் வசந்தாவுடன் பேசிக்கொண்டு இருந்ததை மகள் பார்த்தார். ஆனால் அதன்பிறகு வசந்தாவையும், பார்த்தசாரதியையும் காணவில்லை.
வலைவீச்சு
இதனால் அதிர்ச்சி அடைந்த சேகரும், அவரது உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. தனக்குநிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன், பெற்ற தாயே ஓடி சென்றதை அறிந்த அவரது மகள் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
பார்த்தசாரதியுடன் தனது மனைவி ஓட்டம் பிடித்தது குறித்து பள்ளிக்கரணை போலீசில் சேகர் புகார் செய்தார். இதையொட்டி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் ஜோடியை வலை வீசி தேடி வருகிறார்கள்
No comments:
Post a Comment