திருநெல்வேலி: திருநெல்வேலியில், பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி, கருவை கலைக்க மிரட்டிய பாதிரியார் தலைமறைவானார். திருநெல்வேலி பேட்டை, அந்தோணியார் பள்ளி தாளாளர் செல்வன். பாதிரியாரான இவர், அங்கு, 10ம் வகுப்பு வரை படித்து, தற்போது வேறு பள்ளியில் படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில், மாணவி, ஐந்து மாத கர்ப்பமானார். திடீரென மாணவியின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், கருவை கலைக்கும்படி, மாணவியின் பெற்றோரை, பாதிரியார் மிரட்டினார். தனியார் மருத்துவமனையில், மாணவிக்கு கருக்கலைப்பு நடந்தது. பிரச்னை கசிந்ததால், மாணவியின் தந்தை, போலீசில் புகார் செய்தார். அதன்படி, பாதிரியார் மீது கற்பழிப்பு, மிரட்டல், சிறுமி பாலியல் தடுப்பு பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிந்தனர். பாதிரியார் தலைமறைவாகி விட்டார். கருக்கலைப்பு செய்து எடுக்கப்பட்ட சிசுவை, பேட்டை கல்லறையில் புதைத்துள்ளனர். அதை, தாசில்தார் முன்னிலையில் இன்று, தோண்டியெடுக்க உள்ளனர்.
Thursday, 19 December 2013
மாணவி கர்ப்பம் : பாதிரியார் ஓட்டம்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment