சிவகாசி அருகே பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்;.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி கிராமத்தில் மீனாட்சி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்து கொண்டிருந்தனர்.
அப்போது, பட்டாசில் உராய்வு ஏற்பட்டு தீ பிடித்தது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அறை முழுவதும் தீ பரவியது. இதில், இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
காயம் அடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment