Friday, 17 May 2013

நன்பனை வீடுவரை நுழையாவிட்டதால்பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்


மணிப்பூர் மாணவியை சகோதரனின் நண்பனே பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்மணிப்பூரை சேர்ந்த 25 வயது மாணவி ஒருவர், கல்லூரியின் பெண்கள் விடுதியில் தங்கி  நர்ஸிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருடைய அண்ணனும் பெங்களூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். 

கடந்த செவ்வாய்க்கிழமை இவரும் சேர்ந்து மற்றொரு சகோதரியின் வீட்டிருக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக அன்று தனது அண்ணனின் வீட்டிற்கு மாணவி சென்றார். அப்போது அண்ணன் வேலைக்கு செல்ல வேண்டி இருந்ததால், மாணவியை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு சென்றுவிட்டார். 

வீட்டில் இருத்த போது அங்கு அண்ணனின் நண்பர் அங்கு வந்துள்ளார். அண்ணன் இல்லை என்று கூறியும், அண்ணன் காத்திருக்க சொன்னதாக கூறி வீட்டிற்குள் வந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் மாணவியை காதலிப்பதாக கூறினார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்து அவரை வீட்டை விட்டு வெளியேற சொன்னார். 

இதனால் ஆத்திரமடைந்த அவன், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தான். அதை வெளியே சொன்னால் மோசமான விளைவை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி விட்டு போய்விட்டான். 

மாலையில் வீடு திரும்பிய அண்ணனிடம் அந்த மாணவி இதனை கூறி அழுதார். இதை அடுத்து மாணவியின் அண்ணன் பெற்றோருடன் சென்று போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவனைத் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment