Friday, 17 May 2013

தீவிரவாதம் இஸ்லாமுக்கு எதிரானது: அப்ப தர்ஹா வாழிபாடு?

தீவிரவாதம் இஸ்லாமுக்கு எதிரானது: அஜ்மீர் தர்கா திவான் பேச்சு
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ள காஜா மொய்னுதீன் தர்காவின் 801-ம் ஆண்டு உருஸ் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், உத்தராஞ்சல் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வங்காள தேசத்தை சேர்ந்த சூபி மதத் தலைவர்களின் மாநாடு அஜ்மீரில் நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு தலைமையேற்ற அஜ்மீர் தர்கா திவான் ஜைனுல் ஆபிதீன் அலி கான், 'பொதுமக்களை அச்சுறுத்தி கொல்லும் தீவிரவாதத்தை எவ்வகையிலும் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வகையிலான தீவிரவாதம் இஸ்லாமுக்கும் மனித நேயத்திற்கும் எதிரானது' என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார்.

இதர மாநில தலைவர்களின் ஒப்புதலுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர், சூபி தலைவர்களுக்கிடையே அஜ்மீர் தர்கா திவான் பேசியதாவது:-

தீவிரவாதத்தை ஒழிக்க இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

இந்த இரு சமுதாயத்தினரிடையே நிலவி வரும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க நினைக்கும் தீவிரவாதிகளுக்கு எதிராக நாம் ஜனநாயக ரீதியில் போராட வேண்டும்.

இது தொடர்பாக பிற மதங்களை சேர்ந்த தலைவர்களை சந்தித்து கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.

இனிமேல், ஒரு அப்பாவியின் உயிர்கூட தீவிரவாதத்திற்கு பலியாகக்கூடாது. எந்த தீவிரவாதியும் தண்டனையில் இருந்து தப்பி விடக்கூடாது என்பதை நாம் உறுதிபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்

No comments:

Post a Comment