Saturday, 18 May 2013

மனைவியின் இடுப்புக்கு பூட்டு மாட்டிய கணவன்


மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.வயிற்றில் இருந்த விஷத்தை ‘எனிமா’ தந்து வெளியேற்ற முயன்ற டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

விஷம் வெளியேற்றப்பட வேண்டிய உறுப்பில் கனமான இரும்பு ‘பூட்டு’ மாட்டி பூட்டப்பட்டிருந்தது.இதைக் கண்டு அதிர்ந்து போன டாக்டர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது அவர், “16 வயதில் எனக்கு திருமணம் நடந்தது.

ஆரம்பத்தில் என்னிடம் அன்பாக நடந்து வந்த என் கணவர், நாளடைவில் என் நடத்தையில் சந்தேகப்படத் தொடங்கினார்.இதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு ஒரு டாக்டரிடம் என்னை அழைத்துச் சென்ற அவர், எனது இடுப்புப் பகுதியில் ஓர் ஆபரேஷனை செய்து கடினமான இரும்பு பூட்டை மாட்டி விட்டார். அந்த பூட்டின் சாவியை வெளியே போகும்போது எடுத்துச் சென்றுவிடுவார். இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு கூட நான் மிகவும் சிரமப்பட்டேன். பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக இந்த கொடுமைகளை எல்லாம் சகித்துக் கொண்டு நரகத்தில் வாழ்வதுபோல் வாழ்ந்து வந்தேன்.

No comments:

Post a Comment