Wednesday, 15 May 2013

விமானத்தில் பயணிகளுக்கு இடையூறு செய்த பெண் இறக்கி விடப்பட்டார்.

விமானத்தில் பாட்டு பாடியதால் இறக்கிவிடப்பட்ட இளம்பெண்
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலில் இருந்து நியூயார்க்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஒரு இளம் பெண் பயணம் செய்தார். விமானம் புறப்பட்டதில் இருந்து பாப் பாடகர் ஒயிட்னியின் ஆல் வேல்ஸ் லவ் யூ என்ற பாடலை பாடிக்கொண்டே இருந்தார். இது உடன் பயணம் செய்த மற்ற பயணிகளுக்கு இடையூறையும், எரிச்சலையும் ஏற்படுத்தியது. 

எனவே, விமானிகளிடம் இது குறித்து புகார் செய்தனர். உடனே, அவர்கள் பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் மூலம் அவரை அணுகி பாடல் பாடுவதை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால், அதை அவர் கண்டு கொள்ள வில்லை. உடனே, அதே விமானத்தில் பயணம் செய்த ஏர்மார்ஷல் அப்பெண்ணை கைது செய்தார். 

இதற்கிடையே, அந்த விமானம் வழியில் கன்சாஸ் சர்வதேச விமானத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அங்கு அப்பெண் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டார். பின்னர், கன்சாஸ் விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். சிறிது நேரம் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் அபராதம் எதுவுமின்றி விடுவிக்கப்பட்டார். இந்த தகவலை கன்சாஸ் விமான நிலைய செய்தி தொடர்பாளர் ஜோமெக்பிரைடு தெரிவித்தார்

No comments:

Post a Comment