Friday, 17 May 2013

குரங்கை கொன்றவனுக்கு ஒரு வருடம் மிருகங்களோடு இருக்க வேண்டும் என வினோத தீர்ப்பு


இடாஹோ,
அமெரிக்காவின் இடாஹோ நகரை சேர்ந்தவன் மைக்கேல் வாட்கின்ஸ் (வயது 22).  கடந்த நவம்பர் 17ந் தேதி அங்குள்ள மிருக காட்சி சாலை ஒன்றிற்குள் இரவு வேளையில் உட்புகுந்த அவன் இரு பட்டாஸ் வகை குரங்குகளை பார்த்துள்ளான்.  அவற்றை திருடி செல்வதற்கு முயற்சி செய்த மைக்கேல் தன்னிடம் இருந்த சாக்கு பைக்குள் அவற்றை பிடித்து திணித்தான்.  இந்த முயற்சியில் ஒரு குரங்கு தப்பி சென்றது.  இதனை தொடர்ந்து சென்ற அவன் அந்த குரங்கினை கொடூரமாக அடித்து கொன்றான்.
இது தொடர்பான வழக்கு மாவட்ட நீதிபதி லின் ஜி. நார்டன் முன் வந்தது.  அவர் அவனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.  அவற்றில் இரு வருடங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளது.  மிருக வதைக்காக அதிக அளவாக 6 மாதங்கள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.  மேலும், மைக்கேலுக்கு வழங்கப்பட்ட தண்டனை அவனுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று கருதிய நீதிபதி, அவனுக்கு மிருகங்களோடு ஒரு வருடம் காலம் கழிக்க வேண்டும் என்ற தண்டனையையும் விதித்து உத்தரவிட்டு உள்ளார்.  மீதமுள்ள தண்டனை குறித்து ஒரு வாரத்தில் அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என கூறப்படுகிறது.  பட்டாஸ் வகை குரங்குகள் அனைவருடனும் இயல்பாக பழகுபவை.  கடந்த டிசம்பரில் நியூயார்க் நகரின் சிரகியூஸ் பகுதியில் உள்ள ரோசாமண்ட் கிப்பர்டு மிருக காட்சி சாலையில் இருந்து இரு குரங்குகள் போய்ஸ் மிருக காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டன.  அங்கு அவை தனித்து விடப்பட்டன.  அவை தாமாக ஒரு வாழ்விடத்தை அமைத்து கொள்ளும் என சுதந்திரமாக திரிய விடப்பட்டன.  அவற்றை தத்தெடுத்து கொள்வதற்கும் ஏற்ற வகையில் அங்கு விதிமுறைகள் இருந்தன.  இந்த நிலையில்தான் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment