அமெரிக்க ராணுவத்தில் பாலியல் தாக்குதல்கள் நடப்பது வெட்கக்கேடாகவும், அவமானமாகவும் இருப்பதாக அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவத்தில் பாலியல் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன. இதையடுத்து, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் சக் ஹேகல், முப்படைகளின் தளபதி மார்ட்டின் டெம்ப்சே ஆகியோருடன் அதிபர் ஒபாமா வியாழக்கிழமை முக்கிய விவாதம் நடத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ராணுவத்தில் பாலியல் தாக்குதல்கள் நடப்பது குற்றம் மட்டுமின்றி வெட்ககரமானதும், அவமானகரமானதும் ஆகும். இது ராணுவத்தின் திறனைக் குறைத்துள்ளது. எனவே, நாட்டின் பாதுகாப்புக்கும் இது ஆபத்தானதாகும். சமீப காலமாக ராணுவத்தைப் பாதித்து வரும் இந்தப் பிரச்னையைச் சமாளிக்க ராணுவத் தலைமை உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்புகிறேன்.
இப்பிரச்னையைத் தீர்ப்பதற்கான முன்முயற்சிகளை எடுக்குமாறு பாதுகாப்புத் துறை அமைச்சரையும் முப்படைத் தளபதியையும் நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியுள்ளது. குற்றம் இழைத்தவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார் அளிக்கும் சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும் என்றார் ஒபாமா.
இதனிடையே, அமெரிக்க மேலவை எம்.பி.க்கள் சிலர், ராணுவத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் வீரர்களை விசாரிப்பதற்கு வகைசெய்யும் சட்ட மசோதாவை வியாழக்கிழமை கொண்டு வந்தன
No comments:
Post a Comment