ஜனநாயகம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பற்றி சமீபத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
22 மாநிலங்களில் சுமார் 5500 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
ஜனநாயகம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று 55 சதவீத மக்கள் கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர். கடந்த 2005–ம் ஆண்டு இதேபோன்று சர்வே நடத்தப்பட்டிருந்தபோது 47 சதவீத பேர் தங்களுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியிருந்தனர்.
கடந்த 8 ஆண்டுகளில் ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போதைய ஜனநாயகத்தில் பெண்களை விட ஆண்களே அதிக திருப்தியுடன் இருப்பதும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள சிறுபான்மை இனமக்கள் இன்னும் ஜனநாயகம் வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஜனநாயகம் என்றால் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 54 சதவீதம் பேர் ‘சத்தியமாக தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகம் என்றால் அது மக்களுக்கான சட்டம் என்று 10 சதவீதம் பேரும், அது அரசியல் கட்சி தொடர்பானது என்று 4 சதவீதம் பேரும் சட்டம் சம்பந்தப்பட்டது என்று 5 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். 4 சதவீத மக்கள் ஜன நாயகம் என்றால் சமூக நீதி என்றனர்.
No comments:
Post a Comment