Thursday, 16 May 2013

பெண்கள் ஜனாதிபதியாக வர முடியாது: மதத் தலைவர் அறிவிப்பு


ஈரானில் வருகின்ற யூன் மாதம் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறவுள்ளதால் இதில் சுமார் 30 பெண்கள் போட்டியிட எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கும் வகையில், அந்நாட்டின் மதத்தலைவர் அயோதல்லா முகமது யாஸ்டி, ஜனாதிபதி தேர்தலில் பெண்கள் வேட்பாளராக நிற்க வாய்ப்பு இல்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஈரானின் அரசியல் அமைப்பிலும் கூட ஆண்கள் தான் ஜனாதிபதியாக வரமுடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஈரானின் பாராளுமன்ற தேர்தலில் பெண்கள் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment