Tuesday, 14 May 2013

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகஅஸ்வின் கோட்னிஸ்


imggallery

பொதுமக்கள் எந்த நேரமும் என்னை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என்று புதியதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னிஸ் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் ரோந்து
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆர்.சக்திவேல் சேலத்திற்கு மாற்றப்பட்டார். சேலத்தில் பணிபுரிந்த அஸ்வின் கோட்னிஸ் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:–
சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், காரைக்குடி பகுதியில் நடைபெறும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் காரைக்குடி பகுதியில் குற்றங்களை தடுக்க மோட்டார் சைக்கிள்களில் போலீசார் ரோந்து சுற்றிவர ஏற்பாடு செய்யப்படும்.
சிவகங்கை ம்£வட்டத்தில் ரவுடிகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும். மாவட்ட அளவில் சிறப்பு போலீஸ் பிரிவு ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் எந்த நேரமும் என்னை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்டதேவி தேரோட்டம்
புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ள அஸ்வின் கோட்னிஸ் மராட்டிய மாநிலம் கோலாப்பூர் பகுதியை சேர்ந்தவர். 2003ம் ஆண்டு ஐ.பி.எஸ்.அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். 2006ம் ஆண்டு முதன்முதலாக தேவகோட்டையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். இவர் தேவகோட்டையில் பணிபுரிந்தபோதுதான் கடைசியாக கண்டதேவி கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
பின்னர் பதவி உயர்வு பெற்று கடந்த 2007–2008ம் ஆண்டு கவர்னரின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் நாகப்பட்டினம் போலீஸ் சூப்பிரண்டாகவும், பின்னர் கடலூரில் போலீஸ்சூப்பிரண்டாகவும் பணியாற்றினார்.
சென்னை மவுண்ட் பகுதியில் துணை ஆணையாளராகவும், சேலத்தில் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஆதித்தி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
பிரச்சினைகளை கேட்டார்
புதிய போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னிசை தேவகோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு சமந்த்ரோகன் ராஜேந்திரா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்டாலின், மங்களேஸ்வரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிபிரிவு போலீசார் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களிடம் மாவட்டத்தில் நிலவும் பிரச்சினை குறித்து போலீஸ் சூப்பிரண்டு கேட்டறிந்தார்.

No comments:

Post a Comment