Tuesday, 14 May 2013

பள்ளி மாணவர்களை மஜாஜ் செய்ய வைத்து படத்தை பேஸ் புக்கில் வெளியிட்ட ஆசிரியர்


ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர்  பஷிர் அகமது. இவர் தன்னிடம் படிக்கும் பள்ளி மாணவர்களை வீட்டிற்கு வரவழைத்து தனக்கு  மஜாஜ் செய்து விடும்படி கட்டளையிட்டார். மாணவர்களும் ஆசிரியர் சொல்வதை தட்டமுடியாமல் மஜாஜ் செய்தனர். இந்த காட்சியை ஆசிரியர் பஷிர் முகமது மாண்வர்களுக்கு தெரியாமல் படம் எடுத்து உள்ளார். அது மட்டுமல்லாமல் அந்த படத்தை  பேஸ் புக்கிலும் வெளியிட்டு உள்ளார் இந்த  படத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இந்த தகவல்  பள்ளி முழுவதும் பரவியது. இது பற்றி தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர்கள்  கொதித்தெழுந்தனர் ஆசிரியரை  பள்ளிக்கூடத்தை விட்டே நீக்கவேண்டும்  என கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து மாவட்ட  நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. இச்செயலுக்கு மாநில கல்விதுறை இயக்குநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment