Wednesday, 15 May 2013

கிரிகெட் சூதாட்டம் சிறுவன் கொலை


லகின் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை வைத்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டிற்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மும்பையை சேர்ந்த எம்பிஏ படிக்கும் ஹிமான்ஷு ரங்கா என்ற மாணவன் இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரூ. 30 லட்சத்தை இழந்துள்ளார். 

இதனால் வெறுப்படைந்த அந்த மாணவன் அந்த பணத்தை மீண்டும் பெறவேண்டும் என்ற நோக்கில் தவறான வழியில் யோசித்து இருக்கிறான். பின்னர் பணம் பறிக்கும் நோக்கில், தனது பணக்கார உறவினர் ஒருவரின் 13 வயது சிறுவன் ஆதித்தியாவை கடத்தியிருக்கிறான். சிறுவனின் அப்பாவிற்கு தெரிந்தவன் போல் கடத்திய ரங்கா, அவனது அப்பா ஜிஜேந்திராவிடம் 30 லட்சம் பிணையத்தொகையாக கேட்டிருக்கிறான். 

ஆனால், ஜிஜேந்திரா ரங்கா போலீசை அனுகியுள்ளார். பின்னர் திரும்பும் வழியில் நின்றிருந்த காருக்கு அடியில் ஆதித்தியாவின் செருப்பை கண்டுபிடித்தார். உடனே போலீசுக்கு தகவல் தந்தார். 

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ரத்தக்கறை படிந்த தரைப்பகுதியை கண்டனர். மேலும் விசாரணை நடத்தி ஹிமான்ஷூவை பிடித்து விசாரித்ததில் பணம் தர மறுத்ததால் விகேஷ் சிங்கவி என்பவனுடன் சேர்ந்து இந்த சிறுவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.

No comments:

Post a Comment