Thursday, 16 May 2013

தற்கொலையை வெப்கமெராவில் பதிவு செய்த தமிழக பெண்


க்ரைன் நாட்டில் தற்கொலை செய்து கொண்ட தமிழகப் பெண் சீதாலட்சுமியின் உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி வினோத். 28 வயதான இவர் பக்ரைன் நாட்டின் மனாமா நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் உள்ள பியூட்டி பார்லரில் பணிபுரிந்தார்.
இவரது கணவர் வினோத் இதே ஊரில் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஐந்து மாத கர்ப்பிணியான சீதாலட்சுமி கடந்த 12ம் திகதி குதாய்பா பகுதியில் உள்ள தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்ததை இவர், வெப் கெமரா மூலம் பதிவு செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவரது உடலை, சேலத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக மனாமாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment