Tuesday, 14 May 2013

ஆடம்பர படுக்கை விவகாரம்; பிரதமர் சிக்கலில் தவிப்பு


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தனது மனைவியுடன் கடந்த மாதம் டெல் அவிவ்–லண்டனுக்கு விமானத்தில் சென்றார். முன்னாள் பிரதமர் மார்க்கரெட் தாட்சர் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இந்த பயணத்தை மேற்கொண்டார். அப்போது பிரதமர் தம்பதி தூங்க விமானத்தில் சிறப்பு ஆடம்பர படுக்கை புதிதாக அமைக்க ரூ.75 லட்சம் செலவிடப்பட்டது. இந்த ஆடம்பர செலவுகளை அங்குள்ள தொலைக்காட்சி அம்பலப்படுத்தி விட்டது.
இந்த விவகாரம் தற்போது பிரதமரை சிக்கலில் தவிக்க விட்டு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. ஆவேச அடைந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீதிகளில் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

No comments:

Post a Comment