Thursday, 16 May 2013

எலி கடி இவ்வளவு கொடிய ஆபத்தா?


எலி கடி சற்று மோசமானது என்பது தெரிந்த விஷயம். அது சாதனைக்குரிய அபூர்வ உயிரை பறித்த ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் குர்ன்சாய் பகுதியில் வசிக்கும் ஒருவர் 130 வயதுள்ள ஆமை ஒன்றை வளர்த்து வந்தார். இது உலகிலேயே அதிக வயதுடைய ஆமை என்ற சிறப்பு பெற்றது.
இந்த ஆமை தனது எஜமானரின் வீட்டுத் தோட்டத்தில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த போது எலி அதை கடித்து குதறி விட்டது. இதில் காயம் அடைந்த ஆமைக்கு விஷமுறிவு மருந்து வழங்கி சிகிச்சை அளித்தார்கள். ஆனாலும் கிருமி தொற்று தீவிரமானதால் 5 நாட்களுக்கு பிறகு ஆமை பரிதாபமாக இறந்து போனது.

No comments:

Post a Comment