ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வி.ஆர்.பி. சத்திரத்தை சேர்ந்தவர் மேகநாதன். பேல் பூரி கடை வைத்துள்ளார். இவரது மகள் ஐஸ்வர்யா (13). இவரை மேகநாதனின் கடையில் வேலை பார்த்து வந்த மோகன் காதலித்தார்.
இருவரும் வீட்டை விட்டு ஓடினார்கள். போலீசார் அவர்களை தேடி கண்டுபிடித்தனர். இதனால் மோகனை வேலையிலிருந்து மேகநாதன் நீக்கி விட்டார். அதன் பின்னரும் மோகன் ஐஸ்வர்யாவை ரகசியமாக சந்தித்து காதலித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா மோகனுடன் மீண்டும் வீட்டை விட்டு ஓடினார். இதுகுறித்து ஐஸ்வர்யா தந்தை ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வந்தனர்.
இதை அறிந்த மோகன் ஐஸ்வர்யாவை அவரது வீட்டில் ரகசியமாக விட்டு விட்டு தலைமறைவானார். மகளை கடத்திய மோகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் செய்ய மேகநாதன் மகளுடன் போலீஸ் நிலையம் சென்று கொண்டு இருந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் ஆஸ்பத்திரி அருகே சென்ற போது மோகன் ஐஸ்வர்யாவை வழிமறித்தார். திடீர் என்று கேனில் கொண்டு வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்தார். எரியும் தீயுடன் காதலி ஐஸ்வர்யாவை கட்டிப் பிடித்தார். இதில் அவரது உடலில் தீப்பிடித்தது. இருவரும் அலறி துடித்தனர்.
உறவினர்கள் தீயை அணைத்து இருவரையும் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி மோகன் அன்று இரவே பரிதாபமாக இறந்தார். உடல் கருகிய நிலையில் ஐஸ்வர்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பலியானார். காதலன் இறந்து 5 நாட்களுக்கு பிறகு காதலி உயிரும் பிரிந்து விட்டது.
No comments:
Post a Comment