Sunday, 16 June 2013

ரூ.37 லட்சத்தை கரையான் அரித்தது


பீஜிங் : சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஷுண்டே பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கு அவரது பிள்ளைகள் கடந்த 6 மாதங்களுக்கு முன் 4 லட்சம் யுவான்(ரூ.37.52 லட்சம்) அளித்தார்கள். அந்த பணத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, மர டிராயரில் வைத்தார். பின்னர், அது பற்றி அவர் மறந்தே போனார்.

6 மாதங்கள் கழித்து வீட்டில் சில பராமரிப்பு பணிகளை செய்வதற்காக அந்த பணத்தை எடுக்க முயற்சி செய்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எல்லா கரன்சி நோட்டுகளையும் கரையான்கள் அரித்திருந்தன. கரையான் தின்றது போக எஞ்சிய, துண்டு துண்டாக கிடந்த கரன்சி நோட்டுகளை வங்கி ஊழியர்கள் ஒன்று சேர்த்தனர். கிழிந்து போன அந்த கரன்சிக்கு பதிலாக ரூ.31.89 லட்சத்தை கொடுத்தனர்.

No comments:

Post a Comment